ஜெர்மனியின் செந்தேன்மலரே :)
November 1, 2011 2 Comments
‘பெங்களுரு’வில் ஒரு வருடம் (சரியாக சொன்னால் 10 மாதங்கள் ) சந்தோஷமாக கழித்து விட்டேன். கல்லூரி வாழ்கை தான் என் வாழ்வின் சிறந்த காலம் என்று சொல்லமுடியாது என்றாலும் அது ஒரு நல்ல சந்தோஷமான காலமாகவே இருந்தது. என் பள்ளிக்கூட நாட்களை மிஞ்சும் எந்த ஒரு அனுபவமும் எனக்கு ஏற்ப்படும் என்ற நம்பிக்கை இல்லை. இப்படியாக, மாணவன் என்ற நிலையை கடந்து வேலையில் சேர்ந்து சம்பாதித்து வாழ்ந்தது ‘பெங்களுரு வாழ்கை’.
கடந்த ஒரு வருடம் மிகவும் சந்தோஷமான காலம். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்காது. அடிக்கடி வீடிற்கு செல்லலாம். நண்பர்களுடன் ஊர் சுற்றலாம். பல சந்தோஷங்கள். ஆனால், இதற்க்கு எல்லாம் அடிமனதில் அங்கு ஒரு வருடம் மட்டுமே இருக்க போகிறோம் என்று நிர்ணயித்து இருந்தது ஒரு காரணம். ஏதாவது தவறாக நடந்தாலும், ‘பரவாயில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டும் தானே’ என்று நினைத்து கொள்வேன்.
இதனையே உற்று கவனிக்கும் பொழுது ஒரு விஷயம் கவனித்தேன். பெரியவர்கள் கூறுவது போல “வாழ்கை நிலையில்லாதது. அது ஒரு தற்காலிக விஷயம் மட்டுமே. இதில் நிரந்தரம் என்று எதுவும் இல்லை” என்று நாம் எடுத்து கொண்டால் முழு வாழ்க்கையையும் இது போல சந்தோஷமாக வாழ முடியும் அல்லவா. இந்த வாழ்கை இப்போதைக்கு தான் என்று நாம் நினைக்கும் வரை எந்த ஒரு சோகமும் நம்மை சாய்க்க முடியாது. வருங்காலத்தை பற்றி அதீத கனவுகள் வளராது. கடந்த காலம் பற்றிய சோகங்களும் நிலைக்காது. அனால், இது மேலும் யோசிக்கபட வேண்டிய விஷயமாகவே தோன்றுகிறது. யோசித்து சொல்கிறேன்.
புதிய இடங்களையும் மனிதர்களையும் காணும் ஆசையில் நான் எடுத்து வைத்த முதல் படி.. கணினியியலில் மேற்படிப்பு. பெங்களுருவில் வேலை பார்த்த பொழுது, அது ஒரு வருடம் மட்டுமே என்று நான் நினைக்க காரணமான ஒரு விஷயம். எனினும் எல்லா வேலைகளையும் சரிவர செய்து முடித்து ஜேர்மனி வந்து சேர்ந்த பொழுது ஏற்கனவே சாதித்ததை போன்ற நிம்மதி. விமானத்தில் சரியாக 37 கிலோ உருப்படிகளோடு நானும் சேர்ந்து ஜெர்மணியில் வந்து தரை இறங்கினேன். அப்பொழுது மணி இரவு 8 என்பதால் குளிரும் என்று வெளியில் வந்து பார்த்தால் சூரியன் சுளீர் என்று முகத்தில் அடித்தார் . 🙂
வந்த சில தினங்களில் இந்தியாவை விட்டு வந்து விட்டோம் என்று பெரிதாக தோன்றவில்லை. எப்படி தோன்றும். அண்ணன் வீட்டில் இட்லி, தோசை, சாம்பார் எல்லாம் சாபிட்டால். அங்கு (Frankfurt ) 10 நாட்கள் இருந்து விட்டு பின்னர் மோகனா அண்ணி வீட்டிற்கு சென்றேன். அவர்கள் Bochum என்னும் ஊரில் இருக்கிறார்கள். அது என் அடுத்த 2 ,3 வருடத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சிறிய அளவில் எடுத்து காட்டிய 3 நாட்கள்.
ஒரு வழியாக கல்லூரியில் சேர்ந்து படிப்பும் ஆரம்பித்து விட்டது. இந்த ஊரில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள் என்றாலும் எனது பாடகூட்டதில் நான் மட்டுமே இந்தியன். 🙂
இங்க 3 கடைகளில் இந்திய பொருட்கள் கிடைக்கும். அங்கு சென்று தோசை மாவு வாங்கி வந்து தோசை செய்வது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கை ஆகி விட்டது. நேற்று தீபாவளி. லட்டு, ஜாங்கிரி, மிச்சர் எல்லாம் சாபிட்டோம். இங்கு ஹம் என்று ஒரு ஊரில் ஒரு கோவில் உள்ளது. அந்த ஊர் சற்றே தூரம். அந்த ஊரை பார்த்தால் ஏதோ பெரிய அளவிலான முதியோர் இல்லம் என்று தோன்றும். இங்கு உள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து வசிப்பதில்லை. வயோதிகர்கள் அவர் அவராக ஒரு வீடு வாங்கி தனியாக சென்றுவிடுகிறார்கள். அந்த ஊர் அப்படி வந்தவர்களை இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் பார்த்த எல்லோரும் வயோதிகர்கள் மட்டுமே.
அந்த ஊரில் பிள்ளையார் கோவில் ஒன்றும் காமாட்சி அம்மன் கோவில்( http://en.wikipedia.org/wiki/File:Hamm_Sri_Kamadchi_Ampal-Tempel.jpg ) ஒன்றும் உள்ளது. காமாட்சி அம்மன் கோவிலில் தினமும் அன்னதானமும் நடக்கிறது. நாங்கள் இதுவரை இரண்டு முறை சென்றுவிட்டோம் 🙂 இங்கு குளிர் அதிகமாக இருக்கின்றது. சில நேரங்களில் வாயில் மூக்கில் இருந்தெல்லாம் புகை வருகின்றது 🙂
இங்கு இப்பொழுது மணி அதிகாலை 2 . பக்கத்தில் உறங்க முயற்ச்சிக்கும் நண்பரை இதற்கு மேல் சோதிக்க இயலாது. 😉
நாளை சந்திப்போமா 😉